சிறகடித்து பறக்க
விரும்பிய என்னை
சிறையெடுத்தாய் உன்
குறும்பு புன்னகையால்
மின்னல் வேகத்தில்
பறித்து சென்றாய்
என் இதயத்தை
உன்னை ரசிக்கும் நான்
என்னை மறந்து போகிறேன்
மல்லிகை பூவாய் நான்
மழை சாரலாய் நீ
உன் நினைவுகளில்
மூழ்கி மயங்குகிறேன்
காலம் முழுவதும்
தவமிருப்பேன்
உனது அருகாமைக்காக
என் இதயத்தை கேட்டுப்பார்
கூறும் என் காதலை...
Loading comments…