எனக்கென யாருமில்லா நிலையில்,
உனது ஓசையின் வாயிலாக
என்னை மீட்டெடுத்தாய்,
உன்னை மீட்ட தான்,
இந்த விரல்கள் படைக்கப்பட்டதோ?
இல்லை,
உன்னில் நான் கரைய தான்,
எனக்கு இந்த வாழ்கை படைக்கப்பட்டதோ?
யாரறிவார்,
இப்பொழுதெல்லாம் உன்னுடனே
பயணிக்கிறது
எனது நாட்கள்....
Loading comments…