120Log inSign up
by KANNAN NATRAJANநேரான வாழ்வு
Details

வாழ்க்கைப் பாதை

போகின்ற போக்கெல்லாம்

கல்லும் முள்ளும்

கணக்காய் வந்து

குத்துகையில் வெண்சாமர

மலர்களாய் வருடிய

சான்றோர்களின்

வழிகாட்டுதல் பொன்மொழிகள்!

துன்பம் நேர்ந்து

உயிர் போகின்ற நிலையிலும்

நேரான வாழ்க்கைப்பாதை

காட்டிய விடுதலைப்போராட்ட

வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை

அசைபோட்டபடி 

மௌனமாய் சாதித்துக்கொண்டிருக்கும்

இளைய சமுதாயமே!

வருக! வருக!

Loading comments…