120Log inSign up
by Tamizh muhil Prakasamநட்பென்னும் உன்னதம்
Details

நட்பென்னும் உன்னதமது

கையில் தவழும் நேரமெல்லாம்

பொக்கிஷமாய் பலவற்றையே

நெஞ்சாங் கூட்டில் சேமித்தே

நலமாய் கடக்கிறது காலமுமே !

காலம் பல கடக்க -

கோலமதுவும் மாற -

உள்ளத்து உறையும் நட்பு மட்டும் -

புத்தம்புது சுகந்தமாய்

எந்நாளும் மனமெங்கும் மணம் வீசியே

புத்துணர்வை புதுப்பித்துக் கொண்டே

வாழ்க்கை ஓட்டத்தை இலகுவாக்குகிறது !

Loading comments…